பூங்காவனம் 33 ஆவது இதழ் மீதான பார்வை
பூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்
பூங்காவனம் இதழ் 33 திருமதி. சந்திரகாந்தா முருகானந்தனின் அட்டைப் படத்துடனும், நேர்காணலுடனும் வெளிவந்திருக்கின்றது. இவர் வர்த்தக ஆசிரியர் மட்டுமல்லாமல் மனிதநேயம் சம்மந்தமாக டிப்ளோமா பட்டத்தையும் பெற்று, மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவியாகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இவர் நாடறிந்த பிரபல பல்துறை எழுத்தாளர் டாக்டர். ச. முருகானந்தன் அவர்களின் மனைவியாவார்.
இந்த இதழில் காணப்படும் ஆசிரியர் தலையங்கத்தில் நாட்டில் அடிக்கடி ஏற்பட்டுவரும் இன முரண்பாட்டுச் செயற்பாடுகள் சம்மந்தமாக இனவாதத்தை ஒழித்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். இனவாதமும் மதவாதமும் பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் பகையாளியாக இருந்தால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை சூன்யமாகும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இதழிலே வழமை போன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, நூலகப் பூங்கா போன்றன சிறப்பாகக் காணப்படுகின்றன.
கவிதைகளை பதுளை பாஹிரா, எம்.எஸ்.எம். சப்ரி, நுஸ்கி இக்பால், அப்துல் ஹலீம், நல்லையா சந்திரசேகரன், ஏ.எம். கஸ்புல்லா, சந்திரன் விவேகரன், ஆ. முல்லைதிவ்யன் ஆகியோரும், சிறுகதைகளை எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், ஆனந்தி, எஸ். நளாயினி ஆகியோரும் எழுதியுள்ளார்கள். எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் கவிதைத் தொகுதியான ''இரண்டும் ஒன்று'' நூலுக்கு ரிம்ஸா முஹம்மத் நூல் மதிப்பீட்டை எழுதியிருக்கின்றார்.
மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் என்ற தலைப்பில் எச்.எப். ரிஸ்னா ஒரு கட்டுரையை எழுதியிருக்கின்றார். இன்றைய சமுதாயத்தில் பெண்களின் வகிபாகம் எத்தகையது? எத்தகைய துறைகளில் எல்லாம் அவர்கள் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றார்கள்? என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதோடு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் எடுத்து நோக்கப்பட்டிருக்கின்றது.
2017.07.19 அன்று காலஞ்சென்ற மர்ஹூம் ஏ.எல்.எம். ராசிக் பற்றிய ஞாபகக் குறிப்புகளை கெகிறாவ ஸஹானா தந்திருக்கின்றார். ஏ.எல்.எம். ராசிக் அவர்கள் அமைதியாக இலக்கியச் சேவை புரிந்தவர் என்பதை அறிய முடிவதோடு வானொலிக் கலைஞராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். அத்துடன் 1966 முதல் இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து 16 வருடங்கள் சேவையாற்றியுள்ளார் என்பதையும் அகில இலங்கை முஸ்லில் பெற்றார் ஆசிரியர் சங்கம், முஸ்லிம் வரலாற்று ஆய்வு மையம், முஸ்லிம் கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றில் அங்கம் வகித்து தலைவராகவும், உப தலைவராகவும், செயலாளராகவும் இருந்து பல சேவைகளைச் செய்திருக்கிறார் என்பதையும் அறியக் கிடைக்கின்றது.
''உமர் கய்யாமும் கண்ணதாசனும்'' என்ற தலைப்பிலான எனது இலக்கிய கட்டுரைத் தொடரையும் வாசகர்களுக்காக ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். எனது கட்டுரையை வெளியிட முன்வந்த பூங்காவனம் பிரதம ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசியுங்கள். தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற செய்தியையும் இந்நேரத்தில் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நூலகப் பூங்காவில் ஒன்பது நூல்கள் பற்றிய விபரங்கள் காணப்படுவதோடு ஆ. முல்லைதிவ்யனின் முல்லை நிலமும் நந்திக் கடலும் கவிதை நூல் வெளியீட்டுப் படங்களும் காணப்படுகின்றன. மொத்தத்தில் வாசிப்பு ரசனைக்கு ஏற்ற வகையில் ஆக்கங்கள் யாவும் அமைந்துள்ளன. பூங்காவனம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்
கலாபூஷனம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை
பூங்காவனம் இதழ் 33 திருமதி. சந்திரகாந்தா முருகானந்தனின் அட்டைப் படத்துடனும், நேர்காணலுடனும் வெளிவந்திருக்கின்றது. இவர் வர்த்தக ஆசிரியர் மட்டுமல்லாமல் மனிதநேயம் சம்மந்தமாக டிப்ளோமா பட்டத்தையும் பெற்று, மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவியாகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இவர் நாடறிந்த பிரபல பல்துறை எழுத்தாளர் டாக்டர். ச. முருகானந்தன் அவர்களின் மனைவியாவார்.இந்த இதழில் காணப்படும் ஆசிரியர் தலையங்கத்தில் நாட்டில் அடிக்கடி ஏற்பட்டுவரும் இன முரண்பாட்டுச் செயற்பாடுகள் சம்மந்தமாக இனவாதத்தை ஒழித்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். இனவாதமும் மதவாதமும் பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் பகையாளியாக இருந்தால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை சூன்யமாகும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இதழிலே வழமை போன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, நூலகப் பூங்கா போன்றன சிறப்பாகக் காணப்படுகின்றன.
கவிதைகளை பதுளை பாஹிரா, எம்.எஸ்.எம். சப்ரி, நுஸ்கி இக்பால், அப்துல் ஹலீம், நல்லையா சந்திரசேகரன், ஏ.எம். கஸ்புல்லா, சந்திரன் விவேகரன், ஆ. முல்லைதிவ்யன் ஆகியோரும், சிறுகதைகளை எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், ஆனந்தி, எஸ். நளாயினி ஆகியோரும் எழுதியுள்ளார்கள். எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் கவிதைத் தொகுதியான ''இரண்டும் ஒன்று'' நூலுக்கு ரிம்ஸா முஹம்மத் நூல் மதிப்பீட்டை எழுதியிருக்கின்றார்.
மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் என்ற தலைப்பில் எச்.எப். ரிஸ்னா ஒரு கட்டுரையை எழுதியிருக்கின்றார். இன்றைய சமுதாயத்தில் பெண்களின் வகிபாகம் எத்தகையது? எத்தகைய துறைகளில் எல்லாம் அவர்கள் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றார்கள்? என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதோடு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் எடுத்து நோக்கப்பட்டிருக்கின்றது.
2017.07.19 அன்று காலஞ்சென்ற மர்ஹூம் ஏ.எல்.எம். ராசிக் பற்றிய ஞாபகக் குறிப்புகளை கெகிறாவ ஸஹானா தந்திருக்கின்றார். ஏ.எல்.எம். ராசிக் அவர்கள் அமைதியாக இலக்கியச் சேவை புரிந்தவர் என்பதை அறிய முடிவதோடு வானொலிக் கலைஞராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். அத்துடன் 1966 முதல் இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து 16 வருடங்கள் சேவையாற்றியுள்ளார் என்பதையும் அகில இலங்கை முஸ்லில் பெற்றார் ஆசிரியர் சங்கம், முஸ்லிம் வரலாற்று ஆய்வு மையம், முஸ்லிம் கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றில் அங்கம் வகித்து தலைவராகவும், உப தலைவராகவும், செயலாளராகவும் இருந்து பல சேவைகளைச் செய்திருக்கிறார் என்பதையும் அறியக் கிடைக்கின்றது.
''உமர் கய்யாமும் கண்ணதாசனும்'' என்ற தலைப்பிலான எனது இலக்கிய கட்டுரைத் தொடரையும் வாசகர்களுக்காக ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். எனது கட்டுரையை வெளியிட முன்வந்த பூங்காவனம் பிரதம ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசியுங்கள். தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற செய்தியையும் இந்நேரத்தில் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நூலகப் பூங்காவில் ஒன்பது நூல்கள் பற்றிய விபரங்கள் காணப்படுவதோடு ஆ. முல்லைதிவ்யனின் முல்லை நிலமும் நந்திக் கடலும் கவிதை நூல் வெளியீட்டுப் படங்களும் காணப்படுகின்றன. மொத்தத்தில் வாசிப்பு ரசனைக்கு ஏற்ற வகையில் ஆக்கங்கள் யாவும் அமைந்துள்ளன. பூங்காவனம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்
Comments
Post a Comment