பூங்காவனம் 37 ஆவது இதழ் மீதான பார்வை
பூங்காவனம் 37 ஆவது இதழ் மீதான பார்வை கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 37 ஆவது இதழ் இம்முறை தனது முன் அட்டைப்பட வரிசையில் ஊவா சமூக வானொலி ஒலிபரப்பாளர் திருமதி பாத்திமா றிஸ்வானாவின் முகப்புப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. இவரைப் பற்றிச் சொல்வதானால் வெலிமடைத் தேர்தல் தொகுதியில் உள்ள குருத்தலாவை மஹத்தன்னையில் கணவர், இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். சுமார் 16 வருடங்களாக ஊவா சமூக வானொலிக்குத் தனது பங்களிப்பைச் செய்து வரும் இவர், ஆரம்பத்தில் சமூகத் தொடர்பாட்டாளராகத் தனது சேவையை ஆரம்பித்து, சிரேஷ்ட நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்வு பெற்றுள்ளார். அத்துடன் ஊவா சமூக வானொலியும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகமும் இணைந்து நடாத்தும் ஊடக கற்கை நெறி வளவாளராகவும் இருந்து வருகின்றார். மேலும் ஊவா சமூக வானொலியின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் பெண்கள், சிறுவர் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராகவும் இருக்கின்றார். வழமைபோன்று ஆசிரியர் தனது பக்கத்தில், ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடப்படும் சுற்றாடல் தினத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். குப்பைகளைக்...