பூங்காவனம் 37 ஆவது இதழ் மீதான பார்வை
பூங்காவனம் 37 ஆவது இதழ் மீதான பார்வை
கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர்
கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 37 ஆவது இதழ் இம்முறை தனது முன் அட்டைப்பட வரிசையில் ஊவா சமூக வானொலி ஒலிபரப்பாளர் திருமதி பாத்திமா றிஸ்வானாவின் முகப்புப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. இவரைப் பற்றிச் சொல்வதானால் வெலிமடைத் தேர்தல் தொகுதியில் உள்ள குருத்தலாவை மஹத்தன்னையில் கணவர், இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். சுமார் 16 வருடங்களாக ஊவா சமூக வானொலிக்குத் தனது பங்களிப்பைச் செய்து வரும் இவர், ஆரம்பத்தில் சமூகத் தொடர்பாட்டாளராகத் தனது சேவையை ஆரம்பித்து, சிரேஷ்ட நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்வு பெற்றுள்ளார். அத்துடன் ஊவா சமூக வானொலியும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகமும் இணைந்து நடாத்தும் ஊடக கற்கை நெறி வளவாளராகவும் இருந்து வருகின்றார். மேலும் ஊவா சமூக வானொலியின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் பெண்கள், சிறுவர் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராகவும் இருக்கின்றார்.
வழமைபோன்று ஆசிரியர் தனது பக்கத்தில், ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடப்படும் சுற்றாடல் தினத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். குப்பைகளைக் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதனாலும், அவற்றை நீர் நிலைகளில் வீசுவதனாலும் சுற்றாடல் மாசுபடுத்தப்படுகின்றது. இவற்றிலிருந்து துர் நாற்றம் வீசுவதனால் நோய்த் தொற்றுக்கள் ஏற்படுகின்றன என்றும், பொலித்தீன் பைகளுடன் கழிவுப் பொருட்களை வீசும் பொழுது அதனை உண்ணும் கால் நடைகள், மிருகங்கள் இடர்பாடுகளுக்கு உள்ளாவதாலும் பல சிக்கல்கள் தோன்றுகின்றன என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்.
பூங்காவின் உள்ளே நுழைந்தால் நேர்காணல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நூல் மதிப்பீடு, எழுத்தாளர் அறிமுகம் போன்ற பல சுவையான இலக்கிய அம்சங்களைக் காண முடிகின்றது. சுமார் பதினான்கு கவிதைகளையும், இரண்டு சிறுகதைகளையும், ஒரு உருவகக் கதை, இரண்டு நூல் மதிப்பீடுகள் போன்றவற்றை நாம் சுவைத்துப் படிக்கலாம்.
கவிதைகளை பதுளை பாஹிரா, சஸ்னா பானு நவாஸ், உடப்பூர் வீரசொக்கன், எம்.எஸ்.எம். சப்ரி, மருதூர் ஜமால்தீன், வெலிப்பன்னை அத்தாஸ், எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, அப்துல் ஹலீம், சிபானா சனூன், ஏ.எம். கஸ்புள்ளா, ஆர்.பி. யசோதரை, யாழ். ஜுமானா ஜுனைட், பீ.ரீ. அஸீஸ், ஆ. முல்லைதிவ்யன் ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில் தந்துள்ளனர்.
சூசை எட்வேட்என் ''கெடுவார் வழியிலே..'' என்ற சிறுகதை மூலம் திருமண வைபவங்களுக்கு அழைக்கப்படும் போது ஏற்படக் கூடிய சிக்கல்கள் பற்றி விளக்குவதோடு ஒற்றுமை குழைவதால் வரக்கூடிய ஆபத்துக்கள், அழிவுகளைப் பற்றியும் விளக்குகிறது. அதேபோன்று எஸ்.ஆர். பாலசந்திரனின் ஷஷபணத் திமிர்|| என்ற சிறுகதையின் மூலமாக பணத்திமிர் காரணமாக மற்றவர்களையும், தனது வீட்டில் உள்ள வேலைக்காரியையும் மதிக்காத தன்மையினால் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கே.எஸ். சிவகுமாரன் ஏன் எழுதுகிறார்? என்ற தலைப்பில் கே.எஸ். சிவகுமாரனின் எழுத்து அனுபவங்கள் சிலவற்றைக் காண முடிகிறது. அதேபோன்று இன்னொரு மூத்த பெண் எழுத்தாளராகிய பேராதனை ஷர்புன்னிஸா பற்றிய குறிப்புக்களை அவரது ''கிராமிய மனம்'' எனும் நூலை மதிப்பீடு செய்து ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். முக்கியமாக பேராதனை ஷர்புன்னிஸா முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாவார். இவர் 1948 களில் எழுத்துலகில் பிரகாசித்து காலத்தின் தேவையறிந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் கதை என்பவற்றினூடே சமூகத்துக்கு சேவை செய்தவர் என்பதையும் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, லங்கா முரசு, மலை முரசு, மலைநாடு இஸ்லாமிய தாரகை, புதுமைக்குரல் ஆகிய ஈழத்து ஊடகங்களிலும் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் ஆகிய இந்திய இதழ்களிலும் எழுத்து அலங்காரம் செய்திருக்கிறார்.
இன்னும், ''முதல் பிரசவம்'' எனும் தலைப்பின் கீழ் பெண் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா தனது எழுத்து அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அடுத்து ''வல்லூரின் வானம்'' கவிதைத் தொகுதியைத் தந்தள்ள மருதூர் ஜமால்தீனின் நூல் மதிப்பீட்டை நிலாக்குயிலும், ''ஆணவம் அழிந்தது'' என்ற உருவகக் கதையை ஜெனீரா கைருல் அமானும் முன்வைத்தள்ளார்கள். எழுத்தாளர் அறிமுகத்தில் கினியம இக்ராம் தாஹா பற்றிய அறிமுகக் குறிப்புக்களையும் சுமார் பதினாறு புதிய நூல்களைப் பற்றிய குறிப்புகளும் இதழில் காணப்படுகின்றன. பல இலக்கிய அம்சங்களுடன் பூங்காவனம் வெளிவந்திருப்பது அதன் வெளியீட்டுக்குப் பெருமை சேர்க்கின்றது!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்

Comments
Post a Comment