பூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம் கலாபூஷனம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை பூங்காவனம் இதழ் 33 திருமதி. சந்திரகாந்தா முருகானந்தனின் அட்டைப் படத்துடனும், நேர்காணலுடனும் வெளிவந்திருக்கின்றது. இவர் வர்த்தக ஆசிரியர் மட்டுமல்லாமல் மனிதநேயம் சம்மந்தமாக டிப்ளோமா பட்டத்தையும் பெற்று, மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவியாகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இவர் நாடறிந்த பிரபல பல்துறை எழுத்தாளர் டாக்டர். ச. முருகானந்தன் அவர்களின் மனைவியாவார். இந்த இதழில் காணப்படும் ஆசிரியர் தலையங்கத்தில் நாட்டில் அடிக்கடி ஏற்பட்டுவரும் இன முரண்பாட்டுச் செயற்பாடுகள் சம்மந்தமாக இனவாதத்தை ஒழித்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். இனவாதமும் மதவாதமும் பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் பகையாளியாக இருந்தால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை சூன்யமாகும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கின்றார். இதழிலே வழமை போன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, நூலகப் பூங்கா போன்றன சிறப்பாகக் காணப்படுகின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, எம்.எஸ்.எம். சப்ரி, ந...
Comments
Post a Comment