பூங்காவனம் 34 ஆவது இதழ் மீதான பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்
பல்சுவை ஆக்கங்கள் நிறைந்த
பூங்காவனம் 34 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்
பூங்காவனம் கலை இலக்கிய வட்டத்தினூடாக 'பூங்காவனம்' கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 34 ஆவது இதழ் தற்போது வெளிவந்திருக்கிறது. வாசகர் மத்தியில் அமோக ஆதரவினைப் பெற்றுவரும் இச்சஞ்சிகையானது பல்சுவை ஆக்கங்களுடன் 48 பக்கங்களைக் கொண்டதாக திருமதி. மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களது அட்டைப் படத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகிய இருவரின் தணியாத இலக்கியத் தேடலின் பிரதிபலனாக பூங்காவனம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருப்பதும் நாடு பூராவும் இவற்றுக்கு வாசகர்கள் செறிந்திருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. அடுத்து இம்முறை சஞ்சிகையின் முன் அட்டையை அலங்கரித்த திருமதி. மரீனா இல்லியாஸ் ஷாபியின் நேர்காணலும் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளது.
பண்முக எழுத்தாளர், கல்வியலாளர், நாடக ஆசிரியர் என பல்வேறு ஆளமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள திருமதி. மரீனா இல்லியாஸ் ஷாபியின் கருத்தாடல்கள் மிகவும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் அமைந்திருப்பதுடன் அவரால் கூறப்படுகின்ற விடயங்கள் உயிரோட்டமிக்கதாக இருப்பதோடு வாசிக்கும் போது சுவை உணர்வுகள் மேலாதிக்கம் பெற்று முழுமையாக வாசித்து முடிக்கும் ஆவலையும் தூண்டுகிறது. இதன் மூலம் தம் கருத்துக்களின் பால் வாசகர்களைத் திசை திருப்பும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அத்தோடு இம்முறை கவிதைகளின் பதிவுகள் அதிகாமாகக் காணப்படுவதானது கவிஞர்களிடையே ஏற்பட்டுள்ள கவியாக்கும் ஆற்றலின் வளர்ச்சிப் போக்கின் அதிகரிப்பினை எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது.
சந்திரன் விவேகரன், கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், எஸ். நளாயினி, ஹஸீபா அன்வர், மருதூர் ஜமால்தீன், ஆ. முல்லைதிவ்யன், எம்.எஸ்.எம். சப்ரி, ஆர்.ஜே. பிரகலாதன், அப்துல் ஹலீம், யாழ். ஜாபிர் பரீட், ஆகிய 11 கவிஞர்களின் கவிதைகள் பூங்காவனத்தில் மனம் வீசுவதானது மகிழ்ச்சிக்குரிய சிறப்பம்சமாகும்.
மேலும் நூல் ஆய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் கவிதாயினி எச்.எப். ரிஸ்னாவின் 'மழையில் நனையும் மனசு' எனும் கவிதை நூலை ஆய்வு செய்துள்ளார். மெல்லிதமாய் பேசும் கவிநூறு கவிதைகள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடும் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் நாடறிந்த பெண் எழுத்தாளுமையான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுடைய கவியாக்கத்தின் சிறப்பம்சங்கள் பற்றி எடுத்துக் கூறும் இம் மதிப்பீட்டின் மூலம் நூலாசிரியையின் ஆக்கப் புலமை வெளிக்கொணரப்பட்டுள்ளது. அழகியல், ஆத்மார்த்தம் சார்ந்த கவிதைகளைப் படைப்பதில் ரிஸ்னா வெற்றி பெற்றுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீ. கமால் அகமட் எழுதிய 'இலங்கை புலமைச் சொத்துச் சட்டத்தின் நிழலில் ஆய்வுரிமை மற்றும் பதிப்புரிமை' என்ற கட்டுரையானது ஒரு காலத்துக்குத் செய்தியினைச் சொல்லி நிற்கும் பாங்கு வரவேற்கத்தக்கது. ஒவ்வொருவரின் படைப்புக்கும் உரிய பாதுகாப்பும், அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற கருத்து இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்டுரை ஆசிரியரின் இம்முயற்சியானது வரவேற்புக்குரியது.
அடுத்து கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் தொடர் கட்டுரையாக எழுதிவரும் 'உமர் கையாமும் கண்ணதாசனும்' என்ற கட்டுரை வாசகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து நிற்பதுடன் இலக்கிய உலகு எதிர்பார்க்கும் சிறந்த படைப்பாகவும் அமைந்துள்ளது.
மேலும் பூங்காவனம் பிரமத ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' நூல் பற்றிய ஆய்வினை பதுளை பாஹிரா தந்துள்ளார். அதில் முற்போக்குச் சிந்தனை வெளிப்பாடாக பெண் படைப்பாளிகள் உருவாகின்றனர் என்று கூறும் பதுளை பாஹிரா வாழ்வின் யதார்த்தங்களை தம் படைப்புகள் மூலம் தான் சார்ந்த சமூகத்துக்கு எழுத்தாளர் காட்சிப்படுத்துகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து எஸ். முத்துமீரான் அவர்களின் 'கிழக்கிலங்கை தமிழ் பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள், பழமொழிகள்' என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. இதில் நாட்டுப்புற ஆய்வாளர்களும் பழமொழிகளும் என்ற மகுடத்தின் கீழ் பழமொழிகள் வகைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு எஸ்.ஆர். பாலச்சந்திரன், திருமதி. ஆனந்தி, சூசை எட்வேட் ஆகிய சிறுகதை எழுத்தாளர்களின் முறையே பாவத்தின் பரிசு, ஒரு சத்திய தேவதையின் சாந்தி வேதம், மன்னித்தாலே வாழலாம் என்ற சிறுகதைகளும் இடம்பெற்று பூங்காவனத்தைச் செளுமைப்படுத்துகின்றது.
மேலும் நூலகப் பூங்காவில் கா. தவபாலனின் தாயக பூமி, எம்.எம். ஜூனைதீனின் ஒரு கூண்டின் ஆதங்கம், பாயிஸா நௌபலின் கவிநுட்ப துளிப்பா, நுட்ப பாக்கள் மற்றும் 1000 முத்துக்கள் ஹைக்கூக்கள் ஆகிய நூல்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதுடன் பூங்காவனம் பற்றி வாசகர் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் ஒரு சஞ்சிகையில் இருக்கவேண்டிய அத்தனை சிறப்பம்சங்களும் இவ்விதழில் அமையப்பெற்றிருப்பது. சஞ்சிகையின் தரத்தினை உயர்த்தி நிற்கிறது. பூங்காவனம் தொடர்ந்தும் பூத்துக் குலுங்கி, மனம் பரப்ப எனது வாழ்த்துக்கள்!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்

Comments
Post a Comment