பூங்காவனம் 32 ஆவது இதழ் மீதான பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்
பூங்காவனம் 32 ஆவது இதழ் மீதான பார்வை
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் - கிண்ணியா 07.
கலை இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் சஞ்சிகைகளின் வரவு மிகவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவைகளின் மூலமாக இலக்கிய கர்த்தாக்கள் பலரும் காத்திரமான முன்னேற்றப்பாடுகளுக்குள் தம்மை இணைத்துக் கொள்வது மட்டுமின்றி தமது ஆளுமை விருத்திகளையும் வளர்த்துக் கொள்கின்றனர். மேலும் சஞ்சிகைகள் எழுத்தாளர்களை வளர்த்துவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருப்பினும் அவை தம்மை இஸ்திரப்படுத்தி நிரந்தரமாக வெளிவருவதில் எவ்வளவு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகங்கொடுக்கிறது என்பது அதைவிட உண்மையானதாக உள்ளது. அந்த வகையில் இலங்கையில் எத்தனையோ சஞ்சிகைகள் வெளிவந்து காலப்போக்கில் மறைந்து போனாலும் தமக்கு ஏற்படும் தடைகளையெல்லாம் தாண்டி சமகாலத்தில் நிலைத்து நின்று வெளிவருவது ஞானம், ஜீவநதி, பூங்காவனம், ஒளி அரசி, தென்றல் போன்ற இன்னும் ஒரு சில சஞ்சிகைகள் மாத்திரமேயாகும். இத்தகைய இதழ்களின் சேவையும் பங்களிப்பும் மிகவும் மேலானது.
இத்தகையதொரு கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 32 ஆவது இதழ் தற்போது வெளிவந்திருக்கிறது அதன் முன்னட்டை பட வடிவமைப்பு கடந்த காலங்களைவிடவும் இம்முறை அதிக முன்னேற்றம் கண்டிருப்பதோடு திருமதி ஆனந்தி அவர்களின் படம் அதனை அலங்கரித்து நிற்பதில் புதிய சந்தோசமும் பிறக்கிறது. பூங்காவன தொழில்நுட்பத்தின் உச்ச நிலை நோக்கிய பயணத்தின் ஒரு வெற்றிப்படி தாண்டப்பட்டு இருப்பது ஆசிரிய குழாமிற்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.
உள்ளே! உங்களுடன் ஒரு நிமிடம் என்ற மகுடத்தின் கீழ் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் வாசகர்களோடு தன் உள்ளக் கிடைக்கைகளை பகிர்ந்து கொள்கிறார். ஷஷஇளம் எழுத்தாளர்களுக்கு கரம் கொடுத்தும், மூத்த எழுத்தாளர்களின் ஆலோசனைகளை அனுபவங்களை இளைஞர்களுக்கு அறியக் கொடுத்தும் இலக்கியப் பணியாற்றும் இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உங்களால் ஆன பங்களிப்புகளைச் செய்ய முயலுங்கள்|| என அவர் அதில் வினயமாக குறிப்பிட்டிருப்பதானது ஒரு சஞ்சிகையினை தொடர்ந்து கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் சிரமங்களை எடுத்துக் காட்டுகிறது.
அடுத்து ஏழாலையைச் சேரந்த மூத்த எழுத்தாளர் திருமதி. ஆனந்தி அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதில் அவர் எழுத்துலக சாதனை, பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் பல்வேறு விடயங்களை வாசகர்களோடு பகிர்ந்துள்ளார்.
மேலும் நூலகப் பூங்காவில் மூத்த எழுத்தாளர் திக்குவல்லை கமால் எழுதிய நிராசை, ஜெசுதா யோவின் உயிர் வலி, இத்தாலி தனுவின் கடலை அடையாத நதிகள், அக்கரை ஊர் அப்துல் குத்தூஸின் சிறகு முளைத்த சிந்துகள், மண்டூர் மீனாவின் திருப்பம், விவேகானந்தனூர் சதீஸின் விடியலைத் தேடும் இரவுகள் மற்றும் சிறையில் இருந்து சிங்கள சகோதரனுக்கு, எம்.எஸ்.எம். சியாபின் நோன்பு தெளிவுகளும் வழிகாட்டல்களும் ஆகிய நூல்களின் சிறிய விபரங்கள் அலங்கரிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கவிதைகளின் பக்கத்தை நோக்கும் போது பல்வேறு கவிஞர்களுடைய கவிதைகள் இடம்பெற்றிருப்பதானது கவி உலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினை எடுத்துக் காட்டுகிகிறது.
எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா பஸ்யால, மிகிந்தலை ஏ. பாரிஸ், சந்திரன் விவேகரன், நல்லைய்யா சந்திரசேகரன், பூவெளிகட எம்.எஸ்.எம். சப்ரி, எம்.ஜே.எம். சுஐப், அஸாத் எம். ஹனீபா, அப்துல் ஹலீம், பதுளை பாஹிரா, வெலிப்பன்னை அத்தாஸ், நுஸ்கி இக்பால் ஆகியோரின் கருத்தாளமிக்க கவிதைகள் பல்வேறு தலைப்புகளைத் தாங்கி வெளிவந்திருக்கின்றன.
மேலும், இக்ராம் தாஹா, சூசை எட்வேட், எஸ்.ஆர். பாலச்சந்திரன் ஆகியோர் முறையே மனிதன், கொண்டாடுவோம், இயற்கை நியதி போன்ற சிறுகதைகளும் கா. தவபாலனின் அவசரம் என்ற குறுங்கதையும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளதோடு, மறைந்த கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் இலக்கிய அனுபவ அலசல் என்ற கட்டரையும் கா. விசயரத்னம் எழுதிய பண்டைத் தமிழரின் பழம் இலக்கியங்கள் என்ற கட்டுரையும் முல்லை திவ்யன் எழுதிய தாய் நிலம் நூல் பற்றிய மதிப்பீடும் பூங்காவனத்தின் 32 ஆவது இதழில் இடம்பெற்றுள்ளது.
மொத்தத்தில் சொல்லப் போனால் வாசகர்களை தன்பால் ஈர்த்தெடுக்கக்கூடிய அம்சங்கள் பலவும் இந்தச் சஞ்சிகையில் இடம்பெற்றிருப்பதால் பலரும் விரும்பக் கூடிதாக இச்சஞ்சிகை இருப்பதோடு, அதன் வளர்ச்சிப் பாதையும் ஆரோக்கியமானதாக இருக்கிறது. பூங்காவனம் தொடர்ந்தும் பூத்துக் குலுங்க எனது வாழ்த்துக்கள்!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்

Comments
Post a Comment