பூங்காவனம் 33 ஆவது இதழ் மீதான பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்
பூங்காவனம் 33 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் - கிண்ணியா– 07
பூங்காவனம் இலக்கிய வட்டத்தின் காலாண்டு வெளியீடான பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 33 ஆவது இதழ் தற்போது திருமதி. சந்திரகாந்தா முருகானந்தன் அவர்களின் அழகிய அட்டைப் படத்தோடு வெளிவந்திருக்கிறது.
இலங்கையில் தொடர்ச்சியாக இலக்கிய சஞ்சிகை ஒன்றினை வெளியிட்டுக்கொண்டு செல்வதானது வரலாற்று ரீதியான ஒரு பதிவாகக் குறிப்பிடலாம். பொருளாதார நெருக்கடி, சந்தைப்படுத்தும் வசதி, வாசகர் ஆதரவு இப்படி பல தடைகள் இருந்தும் பூங்காவனம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் அதன்பால் கொண்டுள்ள ஈடுபாட்டை எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது. இந்த வகையில் அதன் பிரதம ஆசிரியை வெலிகம ரிம்ஸா முஹம்மத், துணை ஆசிரியை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோரின் விடாமுயற்சி அர்ப்பணிப்பு, இலக்கியத்தின் மீதுள்ள பற்றுறுதி, சாதித்துக் காட்டும் தன்மை என்பன வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தில் இஸ்தீரமடைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
48 பக்கங்களுடன் வெளிவந்துள்ள கைக்கடக்கமான இச்சஞ்சிகையில், வழமைபோல பல்வேறு இலக்கிய கலை அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றது. உள்ளே, 'உங்களுடன் ஒருநிமிடம்' எனும் தலைப்பில் இனவாதத்துக்கு எதிரான கருத்துக்கள் ஆசிரியர் குழாமினால் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் 'ஒருவரது உரிமையை இன்னொருவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் தட்டிப் பறிக்க முடியாது. அவரவர் உரிமையைப் பேணிக்கொண்டு மற்றவரை விமர்சிக்காமல் வாழந்தாலே எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இதைவிட்டு இனவாதம், மதவாதம் பேசிக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிரிகள் போல் நடந்தால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை சூன்யமாகிவிடும் என்பது திண்ணம். இதனை நாம் ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது தற்கால நிலையில் மிகவும் அவசியமானதொரு பதிவாக அமைந்துள்ளது.
அடுத்து பெண்ணிய எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான திருமதி. சந்திரகாந்தா முருகானந்தன் அவர்களுடனான நேர்காணல் இடம்பெற்றுள்ளது. மனிதநேய டிப்ளோமாதாரியான இவர் பெண்களின் ஆளுமை, ஆற்றல் பற்றிக் குறிப்பிடுவதோடு 'கல்வியறிவு பெண்களின் கண்களைத் திறந்துள்ளது. இதனால் இன்றைய பெண்கள் விழிப்புணர்வு பெற்று தம்மைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அடிமைத் தனங்களையும் கண்மூடித் தனமான ஒடுக்கு முறைகளையும் பின்தள்ளிவிட்டு சுதந்திரமாகவும், முற்போக்காகவும் சிந்தித்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்' என்று தமது கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் ஒரு முற்போக்குவாதியின் இந்த நேர்காணல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் நூல் மதிப்பீடு எனும் பிரிவுக்குள் கவிச்சுடர், கவிதாயினி, பஸ்யால
எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா எழுதிய இரண்டும் ஒன்று என்ற கவிதை நூல் இடம்பெற்றுள்ளன. இதுபற்றி தமது கருத்துக்களை மதிப்பீட்டாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
'புதுவரவுக் கவிஞர் என்று அனுமாணிக்க முடியாதவாறு நூலாசிரியரின் கருத்துகளும், கவிதைகளும் முதிர்ச்சித் தன்மையோடு பேணப்படுவதோடு யதார்த் விடயங்களை அழகிய கவிதைகளாக வடிக்கும் திறன் இவரிடம் நிறையவே புதைந்து கிடக்கின்றது. இவரது ஆற்றல் ஆளுமைகள் இந்நூலில் பரவிக் கிடப்பதை எங்குமே காணலாம்'
மேலும் பதுளை பாஹிரா, எம்.எஸ்.எம். சப்ரி, நுஸ்கி இக்பால், அப்துல் ஹலீம், நல்லையா சந்திரசேகரன், ஏ.எம். கஸ்புல்லா, சந்திரன் விவேகரன், ஆ. முல்லைதிவ்யன் ஆகிய கவிஞர்களுடைய கவிதைகளும் இடம்பெற்று கவிதா உள்ளங்களுக்கு சந்தோஷமளிக்கிறது.
மேலும் நாடறிந்த சிறுகதை எழுத்தாளர்களான எஸ்.ஆர். பாலச்சந்திரன், சூசை எட்வேட், ஆனந்தி, எஸ். நளாயினி ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்று சஞ்சிகையை செழுமைப்படுத்துகின்றது.
அத்துடன் பண்முக எழுத்தாளர்களான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, எம்.எம். மன்ஸுர், கெக்கிராவ ஸஹானா ஆகியோரின் கட்டுரைகளும் உள்ளடக்கம் பெற்றுள்ளதோடு நூலகப் பூங்காவில் அன்புடீன் எழுதிய தொப்புள் கொடியும் தலைப் பாகையும், எம்.பீ.எம். நிஸ்வானின் மரணத்துக்குமுன் மரணியுங்கள், மை வெளிச்சம், யோ. வனிதாவின் அண்ணம், சுலைமா சமீ இக்பால் எழுதிய நந்தவனப் பூக்கள், எஸ்தரின் கால் பட்டு உடைந்தது வானம், சி. வசீகரனின் பூவரசம் தொட்டில், கவிஞர் என். நஜ்முல் ஹுஸைனின் இரண்டு நூல்களான இனிவரும் நாட்களெல்லாம், நஜ்முல் ஹுஸைனின் நட்சத்திரக் கவிதைகள் ஆகிய நூல்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளதோடு ஆ. முல்லைதிவ்யனின் முல்லை நிலமும் நந்திக் கடலும் நூல் வெளியீட்டு நிகழ்வுப் படங்களும் காணப்படுகிறன.
ஆகமொத்தத்தில் ஒரு சஞ்சிகையில் இருக்க வேண்டிய அத்தனை சிறப்பம்சங்களும் நல்ல முறையில் பூங்காவனத்தில் இடம்பெற்றிருப்பதானது அதன் தரத்தினை மேலும் உயர்த்தி நிற்கினறது. பூங்காவனம் தொடர்ந்தும் பூத்துக் குலுங்க எனது வாழ்த்துக்கள்!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
விலை - 100 ரூபாய்

Comments
Post a Comment